தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்கள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளாக உள்ளன.
நாளடைவில் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த சுந்தர்ராஜன் பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களையும், காமெடி கதாப்பாத்திரங்களையும் நடித்து முத்திரை பதித்துள்ளார். கடைசியாக அவர் சித்திரை நிலாச் சோறு என்ற திரைப்படத்தை இயக்கினார்.
சுந்தர்ராஜன் சிறு குழந்தையாக இருந்த போது அரசு கொடுக்கும் கப்ப மாவை வாங்க அவரது பெற்றோர் அவரைத் தூக்கிக் கொண்டு சென்றார்களாம். அப்போது அங்கு வந்த அதிகாரி குழந்தைக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை என்று தெரிந்துகொண்டு சுந்தர்ராஜன் என்ற பெயரை வைத்துள்ளார். ஒரு பஞ்சகாலத்தில் ராகுகாலத்தில் எனக்கு வைக்கப்பட்ட பெயரால் நான் என்ன நல்லா இல்லாமலா போய்விட்டேன் என்பதுதான் சுந்தர்ராஜனின் கேள்வி.