விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகையோடு ராஷ்மிகா… வைரல் புகைப்படம்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (10:12 IST)
விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்தனர். கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது ராஷ்மிகா படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகையான சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாகி வருகிறது. சங்கீதாவும் வாரிசு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்