2 படங்களையும் சேர்த்து விற்பனை செய்ய ‘வாரிசு’ தயாரிப்பாளர் திட்டமா?

வெள்ளி, 8 ஜூலை 2022 (18:08 IST)
தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் இன்னொரு படத்தையும் சேர்த்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ என்ற படத்தையும் அவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ந்த நிலையில் வாரிசு மற்றும் ’ஆர்.சி 15’  ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து வெளிநாட்டு உரிமை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆஃபரை பல முன்னணி நிறுவனங்கள் வரவேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவிலும் அதேபோல் 2 படத்தின்ம் ரிலீஸ் உரிமையும் சேர்த்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்