விஜய், மகேஷ் பாபு நடிக்க மணிரத்னம் இயக்க இருந்த பொன்னியின் செல்வன்… இது எப்ப?

சனி, 9 ஜூலை 2022 (10:07 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம்,  கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் டீசர் ரிலீஸ் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் மணிரத்னம் “கடந்த 1980, 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்தேன். இந்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை” என்றும் பேசினார்.

இந்நிலையில் 2010-ல் மணிரத்னம் இயக்குனர் வசந்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுதி அதை படமாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டார். அப்போது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யும், அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் சில காரணங்களால் அப்போது படம் கைகூடவில்லை. அந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளைதான் விஜய் பின்னர் துப்பாக்கி படத்துக்காக ஒதுக்கி அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அப்போது பரவின என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்