வாரிசு பட 3வது சிங்கில் ''#SoulOfVarisu '' நாளை ரிலீஸ்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (17:11 IST)
நடிகர் விஜய்யின் வாரிசு பட  3 வது சிங்கில் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  இப்படத்தின்  இசையமைப்பாளர் தமன் இசையில், விவேக் வரிகளில், முதல் சிங்கில்  மற்றும்  இரண்டாவது சிங்கிலான தீ தளபதி பாடல் சிம்பு குரல் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 3 வது பாடலான #SoulOfVarisu - #VarisuThirdSingle  நாளை  மாலை 5 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்பாடலை பின்னணி பாடகி கேஎஸ் சித்ரா பாடியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited By Sinoj

அடுத்த கட்டுரையில்