’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (20:41 IST)
தல அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பிற்கு தேவையான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஹைதராபாத் பிலிம் சிட்டியில் இருந்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மூலம் தெரியவந்துள்ளது
 
கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு செட் அமைக்கும் பணி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் இந்த பணி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த படத்தில் நடிக்கக் கூடிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வரவிருப்பதாகவும், இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் களிடமிருந்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று ஒரு கருத்தும் பிரபல பாலிவுட் நடிகை நடிப்பார் என்ற ஒரு கருத்தும் வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் அனைத்தும் உண்மையா என்பது வரவேற்கும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்