இது எப்படி சாத்தியம்? டுவிட்டர் டிரெண்ட் குறித்து அஜித் ரசிகர்கள் கேள்வி

செவ்வாய், 10 டிசம்பர் 2019 (22:40 IST)
டுவிட்டர் இணையதளத்தில் இன்று காலை வெளிவந்த ஒரு அறிவிப்பின்படி இந்த ஆண்டு அதிகளவு ரீடுவிட்டுகள் செய்த 10 ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளிவந்தது. இதில் முதலிடத்தில் லோக்சபா தேர்தலும், இரண்டாமிடத்தில் சந்திராயன் 2 மற்றும் 5ஆம் இடத்தில் பிகில் திரைப்படமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளில் இரண்டாம் இடத்தில்தான் லோக்சபா தேர்தல் இருந்தது. லோக்சபா தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த நிலையில் இந்த ஹேஷ்டேக் இரண்டாமிடத்தில் வந்தது வியப்பில்லை. ஏனெனில் இது குறித்து அதிகம் டிவிட்டர் பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டது 
 
ஆனால் இரண்டாம் பாதியில் அதாவது ஜூலை முதல் டிசம்பர் மாதங்களில் லோக்சபா தேர்தல் குறித்த ஹேஷ்டேக்குகளை யாருமே பயன்படுத்தவில்லை. அவ்வாறு இருக்கும்போது ஒட்டுமொத்த 2019 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற ஹேஷ்டேக் பட்டியலில் லோக்சபா தேர்தலின் ஹேஷ்டேக் முதல் இடத்தில் எப்படி வரமுடியும். லோக்சபா தேர்தல் பரபரப்பாக இருந்த நேரத்திலேயே இரண்டாம் இடத்தில் இருந்த ஆண்டு முழுவதுமான பட்டியலில் எப்படி முதலிடத்தில் வந்தது என்ற கேள்வியை அஜித் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
 
அதேபோல் முதல் ஆறு மாதத்தில் முதல் இடத்தில் இருந்த விசுவாசம் ஹேஷ்டேக் எப்படி 2019ஆம் ஆண்டி 10 இடங்களில் இல்லாமல் மாயமாய் மறைந்து போனது என்றும், அடுத்த ஆறு மாதத்தில் வந்த பிகில் ஹேஷ்டேக் எப்படி 2019 ஆம் ஆண்டின் பிரபலமான ஹேஷ்டேகுகள் பட்டியலில் இடம் பெற்றது என்றும் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் 
 
அஜித் ரசிகர்களின் கேள்விகளில் லாஜிக் இருப்பதாகவும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் லோக்சபா தேர்தல் குறித்த ஹேஷ்டேக் எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாது நிலையில் முதல் பாதியில் இரண்டாம் இடத்தில் இருந்த லோக்சபா ஹேஷ்டேக் எப்படி ஒட்டு மொத்த 2019 ஆம் ஆண்டின் பட்டியலில் முதலிடத்தில் வந்தது என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். இந்த கேள்விகளுக்கு டுவிட்டர் தான் பதில் சொல்ல வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்