ஆர் ஆர் ஆர் ப்ரமோஷனால் கலக்கத்தில் வலிமை விநியோகஸ்தர்கள்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:34 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு தொடர்ந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காகவே ஒரு மாதத்தை ஒதுக்கி இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழு. அந்த வகையில் இரண்டாவது முறையாக தமிழகத்துக்கு நேற்று வந்து ப்ரி ரிலிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இப்படி விதவிதமாக ப்ரமோஷன் செய்து வரும் நிலையில் இந்த படம் ரிலிஸ் ஆகும் அதே நேரத்தில் ரிலிஸ் ஆகும் வலிமை படத்துக்கு எந்த ப்ரமோஷனும் படக்குழு செய்யவில்லை. இதனால் அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் லேசான கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்