ரி ரிலீஸில் சக்கை போடு போடும் வெற்றிமாறனின் வடசென்னை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (08:04 IST)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸான வடசென்னை திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளய்து. இந்நிலையில் சென்னையில் கமலா திரையரங்கில் கடந்த 12ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்துக்கு டிக்கெட் கட்டணமாக 49 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிர்பாராத அளவுக்கு ரசிகர்கள் இடையே ஆதரவு கிடைத்துள்ளதாம். சனி ஞாயிறுகளில் ஐந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடியுள்ளது.

இதனால் லியோ ரிலீஸுக்கு முதல் நாள் வரை இந்த படத்தை அந்த தியேட்டரில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். பெரும்பாலான காட்சிகளின் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்