இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு படக்குழுவினர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் சூர்யாவோடு கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.