மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
கைதி படத்தின் முதல் பாகத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். அதனால் இரண்டாம் பாகத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளாராம். கைதி படத்துக்கு பிறகு லோகேஷ், தொடர்ந்து அனிருத்துடன் பயணித்து வந்தார். இந்நிலையில் இப்போது அந்த கூட்டணி கைதி படத்துக்காக பிரியவுள்ளது.