கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் விவகாரம் குறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் சாத்தான்குளத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர்களை சந்தித்து உதயநிதி ஆறுதல் கூறினார்
இந்த நிலையில் உதயநிதி இபாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து சாத்தான்குளம் சென்று வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்
இபாஸ் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவரின் மகனே செல்லலாமா என்றும் பலர் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்ள் அதில் அவர் கூறியதாவது
மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது’ என்று கூறியுள்ளார்.