அப்படியே கிழக்குச் சீமையிலேயே போலவே இருக்கே… உடன்பிறப்பே டிரைலர் பார்த்த ரசிகர்கள் கருத்து!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:22 IST)
சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகும் உடன்பிறப்பே திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.

கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனர் து ப சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் கிழக்குச் சீமையிலே படத்தின் ராதிகா மற்றும் விஜயகுமார் ஆகியவர்களை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் மினிமம் கியாரண்டி படங்கள். 

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் பார்த்த ரசிகர்கள் பலரும் கிழக்குச் சீமையிலே படத்தை அப்படியே உல்டா செய்து உருவாக்கி இருப்பார்களோ என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதை உறுதி செய்வது போலவே சசிகுமார், ஜோதிகா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் கதாபாத்திரங்களும் உள்ளன என்பது சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்