எல்லா ஓடிடியையும் மொத்தமா இங்க பாக்கலாம்! – அமேசான் ப்ரைமின் அசத்தல் அறிவிப்பு!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:58 IST)
பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது தளத்தில் மேலும் 8 பிரபல ஓடிடிகளின் வீடியோக்களை இணைத்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓடிடி தளங்களின் பயன்பாடு இந்தியாவில் பெருகியுள்ளது. இந்தியாவில் பிரபலமான ஓடிடி தளங்களில் முக்கியமானதாக அமேசானின் ப்ரைம் வீடியோ இருந்து வருகிறது. பல மொழிகளில் வெளியாகும் புதிய படங்களையும் அமேசான் ஓடிடி வாங்கி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் அமேசானில் மேலும் 8 ஓடிடி தளங்களின் வீடியோவையும் பார்க்கும் வசதியை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனிச்சேனல்களாக முபி, ஷார்ட்ஸ் டிவி, டிஸ்கவரி ப்ளஸ், லயன்ஸ்கேட் ப்ளே உள்ளிட்ட 8 ஓடிடி தளங்களின் வீடியோக்களையும் ப்ரைமில் பார்த்து மகிழலாம். இதற்கு தனியாக ஆட் ஆன் சப்ஸ்க்ரிப்ஷன் தனியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்