இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது- விஜய் பட இசையமைப்பாளர் டுவீட்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (18:16 IST)
‘தான் கண்ட கனவு நிறைவேறியதாக’’ விஜய் பட இயக்குனர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இறைவனுக்கும் என் அன்னைக்கும் நன்றி’’ எனப் பதிவிட்டுள்ளார்.

பாய்ஸ் படத்தில்  நடிகராக அறிமுகமான தமன், அதன்பின், இசையமைப்பாளர் மணிசர்மாவிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

இப்படத்தின் தன் குரு மணிசர்மாவுக்கு  நன்றிக்கடன் செலுத்தும் வகையில், வாரிசு படத்தில் யூத் படத்தின் மணிசர்மா இசையமைத்த ஆல்தொட்ட பூபதி என்ற பாடலை ரீமேக் செய்வதாக தகவல் வெளியான நிலையில், இப்பாடலின் கம்போசிங்கை தமன் முடித்திருப்பார் என்றும், விஜய் படத்திற்கான இசையமைத்துள்ளது குறித்தும் இப்பதிவிட்டிருப்பார் என ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்