இன்று தமிழில் வெளியான மோகன்லாலின் புலி முருகன்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (14:49 IST)
மோகன்லாலின் புலி முருகன் மலையாள சினிமா 100 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மலையாள இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் நடிகர் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமிதா, கிஷார் ஆகியோர் நடித்த புலி முருகன் படம் வெளியாகி மலையாளத்தில் நல்ல வசூலை அள்ளியது.

 
மலையாளத்தில் இதுவரை வெளிவந்த எந்தவொரு படமும் ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை. மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு இன்று வெளியானது. 2டி மற்றும் 3டி என இரு வடிவங்களில் 305  திரையரங்குகளில் இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது.
 
புலி முருகன் படத்திற்கு சிறந்த சண்டை காட்சிக்கான தேசிய விருதை பீட்டர் ஹெய்ன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்