இன்று மாலை அசத்தலான ‘குட் பேட் அக்லி’ அப்டேட்.. அஜித் மேனேஜர் அறிவிப்பு..!

Siva
வியாழன், 27 ஜூன் 2024 (14:29 IST)
அஜித் தற்போது குட் பேட் அக்லி’ மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் குட் பேட் அக்லி’  படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6:40 வெளியாகும் என்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் ஆர்வத்துள்ளார்

அஜித்  நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி’  படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது என்பதையும் பார்த்தோம்..

இந்த நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்று இருக்கும் நிலையில் அடுத்த மாத இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகு குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6.40 மணிக்கு குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக் வெளியாகும் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்