அதனால் அஜித் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு சென்றது. அங்கு அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.
இந்நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே அஸர்பைஜானுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித் நேற்று முன் தினம் அஸர்பைஜானுக்கு சென்றார். அங்கு இப்போது பல ஸ்டண்ட் கலைஞர்களோடு அவர் மோதும் ஆக்ஷன் காட்சியை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இந்த படத்தில் நடித்து முடிக்கவுள்ள அஜித், படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.
இயக்குனர் மகிழ் திருமேனியும் பக்காவாக திட்டமிட்டு மொத்தமாக 40 நாட்களில் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளாராம். ஏற்கனவே எடுத்தக் காட்சிகளையும் எடிட் செய்து தயார் செய்துவைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனம் சரியான ஒத்துழைப்புக் கொடுத்தால் திட்டமிட்ட படி தீபாவளிக்கு அந்த படத்தை ரிலீஸ் செய்துவிடுவதில் அவரும் உறுதியாக இருக்கிறாராம்.