விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

vinoth

சனி, 22 ஜூன் 2024 (15:42 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு சென்ற நிலையில் அஜித் ஒருநாள் தாமதமாக நேற்று சென்றார்.


இந்நிலையில் இன்று அவர் கார் ரேஸ் ஓட்டும் வீடியோ ரேஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக விஜய் படங்களின் அப்டேட் அல்லது அவர் சம்மந்தப்பட்ட செய்திகள் இணையத்தை ஆக்கிரமிக்கும்போது அஜித் புகைப்படங்கள் வெளியாகும். அதே போல விஜய்யின் கோட் திரைப்பட அப்டேட் மற்றும் அவரின் பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவுகளுக்கு நடுவே திடீரென்று அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith sir riding car.

| #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | pic.twitter.com/ELmtEbnisZ

— Ajith | Dark Devil (@ajithFC) June 21, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்