ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான்…

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (12:51 IST)
ரஜினியின் ‘2.0’வைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ் ஷா, முத்துராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற உள்ளனர். 
‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை  ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படமும் சயிண்டிபிக் படமாக உருவாக உள்ளது.
 
இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ‘வேலைக்காரன்’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராஜும் இதில்  பணியாற்ற இருக்கிறார். இப்படி ரஜினியின் ‘2.0’ படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்திலும்  பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்