யார் காணாமல் போவார்கள்? முதல்வர் பழனிச்சாமிக்கு விஜய்காந்த் பதிலடி!

ஞாயிறு, 4 மார்ச் 2018 (10:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது கட்சியினர்களிடம் பேசியபோது தற்போது பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காணுவதாகவும், நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள் என்றும் கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு கமல், ரஜினி ஆகிய இருவரும் பதிலளிக்காத நிலையில் விஜயகாந்த் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'கூடிய விரைவில் தேர்தல் வரும் போது யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம். தேமுதிக கட்சிகாரர்களா அல்லது அதிமுக கட்சிகாரர்களா என அப்போது பார்ப்போம்' என்று பதிலடி கொடுத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விஜயகாந்த் கூறியதாவது: அவருக்கு பணி அழுத்தமாக இருக்கலாம். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம். ஆனால் பணி அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வல்ல என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்