பிக்பாஸிடம் புகார் கொடுத்த கணேஷ்; கோபத்தின் உச்சியில் சிநேகன் - ப்ரொமோ

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (11:21 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுங்கள் வந்துவிட்டனர். அந்த புது முகங்களில் பிந்து முதலில் வந்தார், பிறகு ஹரிஸ் மற்றும் சுஜா ஆகியோர் வந்தனர். இந்நிலையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை இருப்பது சினேகன், கணேஷ், ஆரவ் வையாபுரி ஆகியோர் மட்டும்தான்.

 
நேற்றைய பிக்பாஸ் போட்டியில் “காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ்  போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம். பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து  ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும்?” என்பதற்கான காரணங்களைச் சொல்லி இறக்க வேண்டுமாம்.  இப்படியே கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நபருக்கு பத்து மதிப்பெண்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த போட்டி ஆரம்பித்து ஒவ்வொருவராக இறங்கி கொண்டே வந்தனர், இறுதியாக சிநேகனும், சுஜாவும் இருந்தனர். இரவு  முழுதும் தொடர்ந்த டாஸ்க்கில் கடைசியாக ஒரு காலை தொங்கப்போட்டு இருக்க வேண்டும் என்று கூற, சினேகன், சுஜா இறுதிவரை இருந்தனர்.
 
இதனை தொடர்ந்து சினேகன் இரண்டு காலையும் பயன்படுத்தியதாக கணேஷ் பிக்பாஸிடம் புகார் கொடுக்கிறார். இது சினேகனை மிகவும் கோபப்படுத்தியது, அதை தொடர்ந்து இருவருக்கும் சண்டை வெடிக்கிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்