கார்த்தி படத்துக்கு இசையமைக்கும் டி.இமான்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (10:42 IST)
கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்துக்கு, டி.இமான் இசை அமைக்கிறார்.
 


‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரம் அதிகாரம் ஒன்று’. கார்த்தி போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்தப்  படத்துக்கு, டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
அடுத்த கட்டுரையில்