படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட இயக்குனர்: பிரபல நடிகை புகார்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (10:57 IST)
தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். சென்னை பெண்ணான அவரின் நடிப்பில் கடந்த  சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார். அது  பற்றி அவர் கூறுகையில் நான் ஒரு நடிகையாக இருப்பதோடு, ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதற்கு என் நண்பர்களும், குடும்பத்தாரும் ஆதரவு தருவதால் இதை செய்ய முடிகிறது. ஒரு நடிகையாக இருப்பது எளிது அல்ல. ஒரு  நடிகையாக நான் பல கருமங்களை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு சம்பவத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன்.
 
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் என்னை காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன்  பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று  சொல்லிவிட்டேன். அந்த பதிலை சிறிதும் எதிப்பார்க்காத அந்த இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னை சமரசம் செய்ய பார்த்தார். நான் அதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.
 
அந்த இயக்குனர் தனது பட ஹீரோயினுடன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது அளவுக்கு அதிகமாக வயாக்ரா எடுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. அது தான் அவருடைய கர்மா என்றார் நடிகை லேகா  வாஷிங்டன்.
அடுத்த கட்டுரையில்