அஜித் படத்தை இயக்குகிறாரா தியாகராஜா குமாரராஜா?

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (14:42 IST)
அஜித்துக்காக கதை ஒன்றை தயார் செய்துள்ள தியாகராஜா குமாரராஜா அதை விரைவில் அஜித்துக்கு சொல்லப்போவதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது அடுத்த படத்தில் நடிகர் அஜித்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் தியாகராஜா குமாரராஜாவிடம் கதைக் கேட்டதாகவும், இப்போது அவர் கதையை எழுதி முடித்து அஜித்திடம் சொல்ல காத்திருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்