சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்… பின்னணி என்ன?

வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:42 IST)
சாணிக்காயிதம் படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கு பதில் சாம் சிஎஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது. இந்நிலையில் படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் இப்போது அவருக்கு பதில் சாம் சி எஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்