ஒரு நாள் முன்னதாக வெளியாகிறதா அஜித்தின் துணிவு!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (17:33 IST)
அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகின்றன.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன.
அடுத்த ஆண்டு பொங்கலை ஒட்டி துணிவு படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இரண்டு படமும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துணிவு படம் ஒரு நாள் முன்னதாகவே ஜனவரி 11 ஆம் தேதியே ரிலீஸ் செய்ய இப்போது திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்