நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

Siva

ஞாயிறு, 18 மே 2025 (08:03 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து உருவாக்கியிருக்கும் மாபெரும் திரைப்படம் ‘தக்லைஃப்’, உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது.  இந்த ட்ரெய்லர் இணையத்தில் வேகமாக பரவுகிறது.
 
இந்த படத்தின் கதையில், கமல்ஹாசன் ஒரு சிறுவனாக இருந்த சிம்புவை வளர்த்து, தன்  வாரிசாக பார்க்கிறார். ஆனால் காலப்போக்கில், இருவருக்கும் கருத்து முரண்கள் உருவாக, தந்தை-மகன் போல் இருந்த உறவு,  போட்டியாயிற்று. “நீ ஜெயிக்கிறியா, நான் ஜெயிக்கிறேனா?” என்ற உரையாடலே ட்ரெய்லரின் மையமாகும்.
 
இந்த மோதலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது தான் கதையின் சுவாரஸ்யம்.
கமல்ஹாசனும் சிம்புவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளனர். அவர்களுக்கோடு, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அபிராமி, கமலின் ஜோடியாக நடித்திருப்பது போல சில காட்சிகள் இருக்கின்றன.
 
மொத்தத்தில், இந்த ட்ரெய்லர் படம் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படமும், ‘விக்ரம்’ போலவே மாபெரும் ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும், இது சிம்புவின் கேரியரில் ஒரு பெரிய மாற்றத்தை தரும் படமாகவும் பேசப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்