தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

vinoth

வெள்ளி, 16 மே 2025 (11:12 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ‘ஜிங்குச்சன்’ படம் வெளியாகி வைரல் ஆனது. நாளை படத்தின் டிரைலரும் மே 24 ஆம் தேதி பாடல்களும் வெளியாகவுள்ளன.

இதற்கிடையில் இந்த படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து படக்குழு வெளிநாடுகளின் தணிக்கைக்குக் கொடுத்த சிறுகுறிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அதன்படி “சக்திவேல் உலகளாவிய தொடர்புகள் கொண்ட கேங்ஸ்டர். தன் மகன் மேல் அவருக்கு அளவற்ற பாசம். ஆனால் விதிவசத்தால் அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கும் படியான ஒரு சூழல் வருகிறார். ஆனால் அவர் திரும்பி வரும் போது அவர் நேசித்த அவருடைய மகனுடனேயே மோதவேண்டிய சூழல் உருவாகிறது. இதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் கதைக்களம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்