கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

vinoth

சனி, 17 மே 2025 (11:03 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.

சந்தானம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தில்லுக்கு துட்டு வரிசை படங்கள். அந்த படங்களின் நான்காவது பாகமாக 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

ஆனாலும் முந்தைய பாகங்களின் வெற்றிக் காரணமாக இந்த படத்துக்கு முதல் நாளில் நல்ல வசூல் கிடைத்துள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் 3.45 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்