இப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. இதற்கு முன் வெளியாகியிருந்த டீசர் மற்றும் டிரைலர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் முதல் நாளிலேயே மிகப் பெரிய அளவில் வசூல் சாம்ராஜ்யம் அமைக்கும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
தக்லைப் படத்தின் கதை, கமல்ஹாசனின் லுக், மணிரத்னத்தின் இயக்கம் என பல காரணங்களால் ஏற்கனவே ஆர்வத்தை கூட்டியுள்ளது. இப்போது சென்சார் தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.