கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

vinoth

திங்கள், 19 மே 2025 (10:19 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து லைகா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் கமல்ஹாசனின் சம்பளம் மற்றும் பட்ஜெட் ஆகியவை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்