வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

Raj Kumar
செவ்வாய், 21 மே 2024 (17:02 IST)
சிறிது இடைவெளி விட்டு நடித்து வந்தாலும் அஜித் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் மார்க்கெட் மட்டும் குறைவதே இல்லை. துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெகு காலங்களாகவே அஜித்தின் எந்த திரைப்படமும் இன்னும் திரைக்கு வராமலே இருக்கிறது.



இடையில் உலக சுற்றுலா சென்று வந்த அஜித் அதற்கு பிறகு நடிக்க துவங்கிய திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது வெகு நாட்களாகவே நடந்து வந்தது. இதற்கு லைக்கா நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் காரணம் என ஒரு பக்கம் பேச்சு இருந்து வருகிறது.

ஒரே நேரத்தில் அதிகமாக பெரிய படங்களை தயாரித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டது லைகா நிறுவனம் என்று கூறப்படுகிறது. எனவே விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அஜித் அவரது அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பொதுவாக அஜித் திரைப்படம் குறித்து அப்டேட் வருகிறது என்றால் அதற்கு முன்பே அறிவிப்பு வந்துவிடும்.

ALSO READ: எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

அப்போது ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும்போது அது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் திடீரென வெளியானது. இதற்கு என்ன காரணம் என பார்க்கும்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியப்போது ரசிகர்கள் பலருடன் போட்டோ எடுத்துக்கொண்டாராம் அஜித்.

அப்படி போட்டோ எடுத்துக்கொள்ளும்போது ஃபர்ஸ்ட் லுக் உடையிலேயே அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார். எனவே ரசிகர்கள் மூலமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பு நாமே வெளியிட்டு விடுவோம் என அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்று சினிமா துறை சார்ந்த ஆட்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்