தோனி படத்தில் நடிக்கக் காரணம் இதுதான்- நடிகர் யோகிபாபு

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (19:16 IST)
முன்னாள் கேப்டன் தோனியின்  எல்.ஜி.எம் நடித்தற்கான காரணத்தை நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவர், யோகி, பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா, பையா, வீரம்,  அரண்மனை, ரெமோ, பிகில், தர்பார், டக்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முன்னாள் கேப்டன் தோனி  தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எல்.ஜி.எம் (Lets Get Married) . இப்படம் தமிழில் உருவாகியுள்ள  நிலையில்,    இப்படத்தில் ஹீரோவாக நடிகர்  ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர்  நடித்துள்ளனர். இப்படத்தை   ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் டிரைய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா  நேற்று  சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை  நேற்று படக்குழு வெளியிட்ட  நிலையில் . இது சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த  நிலையில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரல் நடித்துள்ள நடிகர் யோகி பாபு இப்படத்தில் நடித்ததற்கான காரணம் தெரிவித்துள்ளார்.

அதில்,  தோனி ஆட்டோகிராப் போட்ட Bat-ஐ  வாங்கித் தருவதாக இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால்தான் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் பிரியரான நடிகர் யோகி பாபு ஷூட்டிங் இல்லாத நாட்களில்  கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில், கேப்டன் தோனி தான் ஆட்டோகிராஃப் போட்ட பேட்டை யோகி பாபுவிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்