உலகக் கோப்பை தொடரில் விளையாட இலங்கை, நெதர்லாந்து அணிகள் தகுதி!

வியாழன், 6 ஜூலை 2023 (21:39 IST)
உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை  நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகள் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.  உலகக் கோப்பை தொடருக்கு 2 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டி ஜிம்பாவேயில்  நடைபெற்று வருகிறது.

இதில், கலந்து 10 அணிகளில் இருந்து ஜிம்பாவே ஸ்காட்லாந்து நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஓமன், இலங்கை ஆகிய  அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர்6 தொடரில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி  வெஸ்ட்இண்டீஸ்  – ஸ்காட்லாந்து அணிகள்  மோதின. இதில், ஸ்காட்லாந்து அணி வெற்று பெற்ற   நிலையில்   வெஸ்ட் இண்டீஸ் அணி வாய்ப்பை இழந்தது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றில் இன்று  நெதர்லாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இடிஹ்ல்,  முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  278 ரன்கள் எடுதால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  நெதர்லாந்து அணி 42.5 ஓவரில் 278 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

எனவே, இந்தியாவில் அக்டோடர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் ஜிம்பாவே அணிகள் கடந்த 3 ஆம் தேதி மோதின. இதில், இலங்கை அணி அபார வெற்றி பெற்று இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்