எனது முக்கிய கதாப்பாத்திரம் இதுதான் - நடிகர் சோனு சூட் நெகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (22:20 IST)
கொரோனா காலத்தில் நான் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் என் வாழ்வில் மிக முக்கியானது என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

கொரொனா காலத்தில் நாட்டில் ஏழை எளிய மக்கள், விவசாயிகள்,புலம்பெயர் தொழிலாளிகள் , வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலருக்கும் நடிகர் சோனு சூட் உதவி செய்தார்.

இதனால்  அவருக்கு ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு இந்தியாவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹதராபாத் காவல்துறை சார்பில் இன்று கொரோனா காலத்தில் பணியாற்றிய காவல்துறையினரைப் பாராட்டும் விதமாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சோனு சூட் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது :

சினிமாவில் நான் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால்  கொரோனா காலத்தில் நான் ஏற்ற கதாப்பாத்திரம்தான் என் வாழ்வில் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்