திரிஷா திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இந்த டாப் நடிகர்கள் தான் காரணம்?

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (17:22 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை த்ரிஷா திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் சிம்பு மற்றும் ராணா தான் காரணமாம். 
 
அவர்கள் இருவரையும் திரிஷா உருகி உருகி காதலித்தார். ஆனால் கடைசியில் அவர் ஏமாற்றிவிட்டதால் திருமணம் செய்துகொள்வதில் நம்பிக்கையே இல்லையாம். அதனால் முரட்டு சிங்கிளாக இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்