தி லெஜண்ட்’ ரிலீஸ் தேதி இதுவா?

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:16 IST)
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது
 
100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் பிரமாண்டமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது
 
மேலும் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பான் இந்தியா திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ வெளியாக இருப்பதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரெளட்டாலா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்