லெஜண்ட் சரவணனுடன் நடிப்பீர்களா? விஜய் பட நடிகை ஓபன் டாக்!

செவ்வாய், 31 மே 2022 (18:04 IST)
சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில்  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா ரூ,6 கோடி செலவில் பிரமாண்டமாக  நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரைலர் கவனத்தை ஈர்த்து, யூடியுபில் சுமார் 1 கோடி பார்வையாளர்களை நெருங்கியுள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவிடம் லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியக நடிப்பீர்களா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

 அதற்கு, என்னைத் தேடி வரும் எல்லாப் படங்களிலும் நான் நடிப்பதில்லை, அக்கதையும், எனக்கான கதாப்பாத்திரமும்  எனக்குப் பிடித்தால் மட்டும்தான் நான்ன அதில் நடிப்பேன். சரவணன் நடிக்கும் படத்தில் எனக்கான கதாப்பத்திரமும் கதையும் பிடித்தால் நடிப்பேன் எனத் தெரிவித்தார்.

நடிகை தமன்னா, விஜய்யுடன் இணைந்து  சுறா படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்