ஒரே படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகர்களின் வாரிசுகள்

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (17:03 IST)
நடிகை அம்பிகாவின் மகனும், நடிகர் லிவிங்ஸ்டனின் மகளும் ஒரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். இந்த படத்திற்கு கலசல் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தினை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வின் மகாதேவன் இயக்குகிறார். அவர் இயக்குநராக  அறிமுகமாவதும் இந்த படத்தில்தான்.
நடிகர், நடிகைகளின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாவது ஒன்றும் புதிதில்லை. 1980களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த அம்பிகாவின் மகனான ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இதே படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இவர்களோடு ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன் பாப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாளை பழனியில் இதன்  படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் நடிகை ராதாவின் மகள் துளசியும் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்