இன்றைய நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டுக்கான இரண்டு புதிய நெக்சஸ் முயற்சிகளை அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதில், முதல் குழு, இந்தியாவின் பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, வழி காட்டுதல், நெட்வொர்க் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றையும் செய்கிறது.
இதற்கு முன் வங்காளதேசம், பூடான், நேபாள் மற்றும் இலங்கையில் இதுபோன்ற தொடக்க மையங்களை நெக்சஸ் அமைத்து வெற்றி கண்டுள்ளது. எனவே, தற்போது டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.