ஒரே கதை! ஒரே வேடத்தில் நடித்த ரஜினி-கமல்!

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (10:49 IST)
சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் ரஜினியும் கமலும், மலையாளத்தில் வெளியான அடிமகல் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் ஒரே  வேடத்தில் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் பிரேம் நஸிர், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'அடிமகல்'. சேதுமாதவன் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றி பெற்று தமிழ்  மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 
 
தமிழில் 'நிழல் நிஜமாகிறது' என்ற பெயரிலும் தெலுங்கில் 'சிலக்கம்மா செப்பிந்தி' என்ற பெயரிலும் வெளியான இந்த படத்தில் தமிழில் கமல்ஹாசனும் தெலுங்கில் ரஜினிகாந்தும் நடித்திருப்பர்.
 
இதில் ஆச்சரியம் என்ன வென்றால் சினிமா மற்றும் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் ஒரே வேடத்தில் நடித்ததுதான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்