இதற்கிடையில் முருகதாஸ், சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தற்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முருகதாஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.