பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் !

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (14:13 IST)
ரஜினியின் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் வெளியிடும் உரிமையையும் பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்ரேஷன் பெற்றுள்ளது.


 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . வரும் பொங்கலன்று வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற மிகப்பெரும் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர். 
 
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதி அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக காலை வெளியானது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், பேட்ட படத்தை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான "மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்ப்ரேஷன்" பெற்றுள்ளது. 


 
சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தையும் உலகமுழுவதும் இதே நிறுவனம் தான் திரையில் கொண்டு சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்