விஜய் சேதுபதிக்கு தனி விமானம்: சன் பிக்சர்ஸ் ஸ்பெஷல் கவனிப்பு

வியாழன், 13 டிசம்பர் 2018 (20:53 IST)
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஷா, சிம்ரன், திரிஷா, சசிகுமார், கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் ரஜினிக்கு இல்லாத ஸ்பெஷல் கவனிப்பி சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதிக்காக செய்து கொடுத்துள்ளது. இந்த செய்தியை சார்ந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 
 
ஆம், பேட்ட பட விழாவில் கலந்து கொள்வதற்காக சன் பிக்சர்ஸ் நடிகர் விஜய் சேதுபதிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதாவது, இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் நேரத்தில் ரஜினிகாந்த், கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி தாமதமாகவே வந்தார். 
இந்த தாமதத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஒகேனக்கலில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி சென்னை திரும்பியுள்ளார். 
 
இதில் ஸ்பெஷல் என்னவெனில் விஜய் சேதுபதி சென்னை வருவதற்காக தனி விமானம் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி சில புகைப்படங்கலும் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்