பேட்ட படைத்த சாதனை: ரஜினி வெறியன் டிரெய்லர் வெளியிட திட்டம்

வியாழன், 13 டிசம்பர் 2018 (19:21 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

 
நேற்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசர் வெளியானது. நேற்று காலை 11 மணிக்கு வெளியான ‘பேட்ட’ டீசர் ரிலீசான 5 நிமிடத்தில் தன்னுடைய யூ ட்யூப் சாதனையை துவங்கி விட்டது.
 
20 நிமிடங்களிள் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்த டீசர் அதே வேகத்தில் 40 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து இன்னும் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. 
 
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளதால் டீசர் முழுக்க ரஜினி மட்டுமே இருந்தார். வேறு எந்த கதாபாத்திரமும் காட்டப்படவில்லை. இந்நிலையில் விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளனர். 
 
படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் தன்னை ரஜினியின் ரசிகனாக மட்டும் அல்லாமல் ரஜினியின் வெறியன் என்று அடையாளப்படுத்தி கொண்டார். எனவே படம் பக்கா மாஸ் ரஜினி படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்