விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் ரன்னிங் டைம் தகவல்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (07:57 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட நிலையில் எந்தவிதமான கட்களும் இல்லாமல், யு ஏ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 34 நிமிடம் ஓடுமளவுக்கு எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்