தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருமே அதிக ரசிகர்களை கொண்டுள்ளனர். கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?
முன்னணி நடிகர்களாக இருக்கும் தல, தளபதி என்று அழைக்கப்படும் இவர்களின் படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டத்தொடங்கி விட்டது. படத்திற்கு இவர்கள் இருவரும் வாங்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ‘பைரவா’ படத்துக்கு நடிகர் விஜய் ரூ. 23 கோடி வாங்கினாராம். அட்லி இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ‘விஜய் 61’ படத்திற்கு சம்பளமாக ரூ. 25 கோடியை வாங்கியுள்ளாராம் விஜய்.
தல அஜித் ‘விவேகம்’ படத்துக்காக ரூ. 25 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்துக்கு ரூ. 40 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.