ஐஸ்வர்ய இயக்குநர் ஏற்கனவே ஒல்லி நடிகரை வைத்தும், வாரிசு நடிகை நடிப்பில் வந்த நம்பர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சமீபத்தில் நடனம் ஆடி அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகி பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். அதனை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளிவந்தது.
தொடர்ந்து புட் கிங் புட் படத்தை இயக்கினார். தற்போது பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருவதில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் லிட்டில் ஸ்டாரான வம்பு நடிகரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது ஐஸ்வர்ய இயக்குநரின் ஆசையாம். இதற்கான கதையும் தயார் நிலையில் இருப்பதாகவும், லிட்டில் ஸ்டாரான அந்த வம்பு நடிகரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இன்னும் இந்த கூட்டணிக்கு இயக்குநரின் கணவர் ஓகே சொல்லவில்லையாம். ஆல்ரெடி மாமனார் லிட்டில் ஸ்டாரான வம்பு நடிகருக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சதையே அவரால இன்னும் ஜீரணிக்க முடியலையாம்.