முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (16:34 IST)
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு திரைப்படம் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த சந்திப்பின்போது அல்லு அர்ஜுன் கைது விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் தினத்தில் பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் பிறகு, அல்லு அர்ஜுன் மீது நேரடியாக முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்தது.

இந்நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில் 36 பேர் கொண்ட குழு முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தது. இந்த சந்திப்பின்போது, அல்லு அர்ஜுன் விவகாரம், சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலையை உயர்த்துவது, படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது, திரைப்படத் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டதாகவும், தெலுங்கு திரையுலகினர் முதல்வரிடம் சில கோரிக்கைகள் வைத்ததாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்